சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக சமூகத்தை தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம். மகளிர் தின வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் மக்கள் மேம்பாட்டிற்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்ற அறிவிப்பு என்று அவர் பதிவிட்டுள்ளார்.