Categories
மாநில செய்திகள்

சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி… கமல்ஹாசன் டிவிட்…!!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கப்பட்டது சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ‘‘மருத்துவப் படிப்பிற்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. நீட் தேர்வு ரத்து, மத்திய தொகுப்புமுறையை கைவிடுதல் என நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |