காஞ்சிபுரம் தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றாத ஐந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் செயல்படலாம் என உத்தரவிடப்பட்டது. உணவகங்கள் மட்டும் இரவு 8 மணி வரை செயல்படலாம். மேலும் செயல்படும் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டது. இத்தகைய நிலையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த பல்பொருள் அங்காடி கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இயங்கிவந்த கடைக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதைப்போலவே காஞ்சிபுரம் காந்தி ரோடு சாலையில் செயல்பட்டுக் கொண்டிருந்த துணிக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் முறையாக தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றாத மேலும் 3 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி ஆகியோர் சீல் வைத்துள்ளனர்.