பிரித்தானிய இளவரசர் வில்லியம் கால்பந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளில் உள்ள இனவாதத்திற்கு எதிராக அறிவித்துள்ள சமூக ஊடக புறக்கணிப்பில் இணைந்துள்ளார்.
பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஃபார்முலா ஒன் டிரைவர் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் யூனியன் ஆப் ஈரோப்பியன் ஃபுட்பால் அசோசியேசன் ஆகியோரின் ஆதரவு பெற்ற முக்கிய கால்பந்து கிளப்புகள் நடத்தும் அரிய சமூக ஊடக ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் விளையாட்டுகளில் உள்ள பாகுபாடு, துஷ்பிரயோகம், இனவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த பிரச்சாரத்தில் மூன்று நாட்கள் பங்கேற்பவர்கள் சமூக வலைதளங்களை புறக்கணிக்க உள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இளவரசர் வில்லியம் ஆதரவை தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/kensingtonroyal/?utm_source=ig_embed
அதில் அவர் “நான் முழு கால்பந்து சமூகத்துடனும் FA-வின் தலைவர் என்ற வகையில் இந்த வார இறுதியில் சமூக ஊடக புறக்கணிப்பில் இணைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வில்லியம், கால்பந்து சமூகத்தில் உள்ளவர்களும், விளையாட்டு வீரர்களும் இணையதளத்தில் தொடர்ந்து பெறப்பட்ட துஷ்பிரயோகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த வார இறுதியில் ஏப்ரல் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணி முதல் மே 3-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இங்கிலாந்தில் உள்ள கால்பந்து சமூகத்தில் சமூக ஊடக புறக்கணிப்புக்கு ஒன்று படுவோம்” என்று கூறியுள்ளார்.