Categories
தேசிய செய்திகள்

சமூக ஊடகப் பிரபலங்களுக்கு ஷாக் நியூஸ்….. மத்திய அரசின் புதிய விதிமுறைகள்….!!!!

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களுக்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் சமூக ஊடகப் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விதிமுறைகள் குறித்து பல தரப்பினரிடம் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் இந்த விதிமுறைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சமூக ஊடகங்களில் பிரபலங்கள் பொதுமக்களை தவறாக வழி நடத்தும் வகையில் செய்யும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முயற்சி செய்கிறது.

அதனைத் தொடர்ந்து இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை போல ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் மக்களை தவறாக வழிநடத்து விளம்பரங்களை கட்டுப்படுத்த வழிகாட்டு விதிமுறைகளை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டது. மேலும் இந்த இரண்டு வழிகாட்டு விதிமுறைகளில் தவறாக வழி நடத்தும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறக்கூடாது அல்லது ஏமாற்றப்படக்கூடாது என்பதுதான் நோக்கமாக உள்ளது.

Categories

Tech |