Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக…. சிறப்பாக நடைபெற்ற மீன் பிடி திருவிழா…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் பகுதியில் உள்ள பெரியகுளம் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது. இதனை அடுத்து கிராம மக்கள் பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை அந்த குளத்தில் வளர்க்க விட்டுள்ளனர். தற்போது மீன்கள் பெரிதான நிலையில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றுள்ளது. இதற்காக ஏராளமான கிராம மக்கள் குளத்திற்கு வந்து போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் தாங்கள் பிடித்த மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |