Categories
தேசிய செய்திகள்

சமூக பரவலாக மாறிய கொரோனா…. கேரளா, கர்நாடகா அரசு தகவல் …!!

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை நெருங்கி விட்டது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி கே.கே சைலஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில்  இல்லாதவர்கள் எந்த பயணமும் மேற்கொள்லாதவர்க்களுக்கு அதிக தொற்று ஏற்படுவதாகவும், இதனால் சமூக பரவல் நிலையை நெருங்கி விட்டதாகவும், ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் கொரோனா முடிவிற்கு வரும் என்றும் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

அதன் காரணமாகவே கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார். இதே போல் கர்நாடகாவிலும் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளருக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மதுசாமி, சில இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளதாகவும், நிலைமை கை மீறி செல்வதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறி விட்டதோ என தாங்கள் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |