Categories
மாநில செய்திகள்

சமூக வலைதளங்கள் மூலமாக “பணம் வசூல் செய்த பிரபல சின்னத்திரை நடிகை”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

பிரபல  சின்னத்திரை நடிகை மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியான சமூக வலைதளங்களை  தொடங்கி சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து சினேகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சின்னத்திரை நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் ஜெயலட்சுமி இந்த  குற்றச்சாட்டை  மறுத்துள்ளார். இதனை அறிந்த இவரது   ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |