Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சமூக வலைதளத்தில் அவதூறு…. சடலமாக தொங்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாம்பழத்தான் ஊரணி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவரை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்தராஜ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |