Categories
மாநில செய்திகள்

சமூக வலைத்தளங்களில்…. “பொய்யான செய்தி பரப்பினால்”…. கடும் சட்ட நடவடிக்கை… சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை..!!

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் பொய்யான செய்திகளை வெளியிடுவோர்  மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அந்த புகாரில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை  மக்களிடையே பரப்பும் வகையில் பதிவு ஒன்றை செய்துள்ளதாகவும், அதேபோல மதத்தின் அடிப்படையில் மக்களிடையே, வெறுப்பு பகைமை உணர்வை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும்விதமாக , பொது அமைதியை குலைக்கும் வகையில் பொய்யான செய்தியையும், உண்மை செய்திகளை திரித்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவோர்  மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

 

 

Categories

Tech |