சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக நடிகை ஷில்பா ஷெட்டி பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து இருக்கின்றார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்குப் பின் திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டார். இந்தநிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.
தற்போது படங்களில் பிஸியாக நடித்தாலும் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் சமூக வலைதளங்கள் எப்போதும் ஆக்டிவாக செயல்பட்டுவருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் தனது வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் சில சொந்த விஷயங்களில் பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றது. இதனால் சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாலோவர்கள் இவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி திடீரென சமூக வலைத் தளங்களில் இருந்து சிறிது காலம் விலக முடிவு செய்திருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் ஒரே மாதிரியான விஷயங்களை பதிவு செய்து மிகவும் சலிப்படைந்து விட்டதாகவும், புதிய விஷயத்தை கண்டுபிடிக்கும்வரை சமூக வலைத் தளங்களில் இருந்து நான் வெளியேறுகிறேன் என தெரிவித்து இருக்கின்றார்.
ஷில்பா ஷெட்டி சமூக வலைத் தளத்தை விட்டு வெளியேறுவதால் அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் பல நெட்டிசன்கள் நீங்கள் வெளியேறுகிறேன் என்று சொன்னது கூட ஓகே. ஆனால் அதற்காக சொன்ன காரணம்தான் மிகவும் சிரிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.