Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டதால்…. கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவி…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி கல்லூரி விடுதியில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது பெயரில் மர்ம நபர் ஒருவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் போலியான கணக்கு தொடங்கியுள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மர்மநபர் மாணவியின் புகைப்படத்தை வைத்து அடிக்கடி சமூகவலைதளத்தில் குறுஞ்செய்தியை பரப்பி வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி அந்த குறுஞ்செய்திகளை அழிக்க முயற்சி செய்தும், அவரால் முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி தெரிவித்துள்ளார். மாணவியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரவிய அந்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |