சமூக வலைதளத்தில் நண்பர்கள் போல நடித்து வெளிநாட்டு பரிசு பொருட்களை அனுப்புவதாக தெரிவித்து மோசடி நடப்பதாக சைபர்கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
அறிவியல் வளர்ச்சியால் சமூக வலைதளம், இணையதளம் மூலம் உடனுக்குடன் தகவல்களை பரிமாற முடிகின்றது. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் நெருங்கி பழகுவது உடன் அவர்களிடம் சொந்த விவரங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள். இதனால் அதை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் நண்பர் போல பழகி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.
இதுபோன்ற மோசடி நபர்கள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பர்கள் போல பழகி மோசடி செயலில் ஈடுபடுகிறார்கள். அதன் பின் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் இருப்பதாக பொய்யான தகவல்களை அளிக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்புவதாகவும் மூன்று தினங்களில் வந்து சேர்ந்து வரும் என்று மோசடி நபர் கூறுகிறார்கள். இதை நம்பி மற்றவர்கள் வெளிநாட்டு பொருட்களுக்கு ஆசைப்பட்டு பணத்தை அனுப்பி விடுகிறார்கள். அதன்பின் பொருள் ஏதும் வராமல் ஏமாந்து விடுகின்றார்கள்.
அதன்பின் மோசடி நபருக்கு தொடர்பு கொண்டால் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கும். இதனை அடுத்து அவர்கள் ஏமாந்தது தெரியவரும். அதன்பின் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பார்கள். எனவே இதுபோன்ற மோசடி சம்பவங்கள் குறித்து புகார்கள் அதிகமாக வருகின்றன. எனவே பொதுமக்கள் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களுடைய சொந்த விவரங்களை பகிர கூடாது என்று திண்டுக்கல் தெரிவித்தனர். மேலும் மோசடிகள் குறித்து 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் கொடுக்கலாம் என்று கூறினார்கள்.