Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் இருளப்பசாமி கோவில் தெருவில் சுடலையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான பெரியசாமி (35) என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் பெரியசாமி 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பழகி வந்தார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெரியசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து கர்ப்பமான சிறுமியை கருக்கலைப்பு செய்வதற்காக பெரியசாமி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து மருத்துவர்கள் சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.

Categories

Tech |