இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் வைத்திருப்பவர்கள் இனி சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவெரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக, 2.5 லட்சம் காஸ் சிலிண்டர்களை, டெலிவரி செய்கிறது.
ஒரு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், திடீரென சிலிண்டர் தீர்ந்து விட்டால், அவர்கள் பதிவு செய்தாலும், மறுநாள் தான் சிலிண்டர் கிடைக்கும். இது கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் சிலிண்டர் பதிவு செய்த உடனே, டெலிவரி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு தக்கல் திட்டம் என்று பெயர். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.