மெக்கானிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டிபேட்டை பகுதியில் ஷக்கீர் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடை உள்ளது. அதற்கு அருகே சிறிய ஹோட்டலும் இருக்கிறது. நேற்று முன்தினம் காலை மெக்கானிக் கடையின் மேற்கூரை வழியாக புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் கடையில் இருந்த வாகன டயர்கள், ஆயில், உதிரிபாக பொருட்களில் தீ வேகமாக பரவியதால் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மெக்கானிக் கடையில் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் தெரியவில்லை. ஹோட்டல் அருகே இருப்பதால் சமையலறையில் இருந்து தீ பரவி இருக்கலாம் அல்லது மின் கசிவனால் தீ பிடித்து எரிந்திருக்கலாம். விசாரணை நடந்து முடிந்த பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என கூறியுள்ளனர்.