வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் அண்ணாநகர் 11-வது தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய ராணி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது வீட்டு சமையல் அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது பாம்பு ஒன்று அடுப்புக்கு அருகில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராணி உடனடியாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்ல பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.