நாட்டில் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு பாமாயில், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது. பாமாயிலுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக அரசிற்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். சில்லறை விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறையும். சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.