இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலையும் விரைவில் உயரும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு விரைவில் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
Categories