Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை குறைவு… மாநில அரசுதான் உறுதி செய்ய வேண்டும்… மத்திய அரசு உத்தரவு…!!!

சமையல் எண்ணெய் மீதான வரிவிதிப்பு குறைந்ததன் முழுப்பயனும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக சமையல் எண்ணை மீதான விலை உயர்வு அதிகரித்து வருகின்றது. பண்டிகை காலத்தை ஒட்டி சமையல் எண்ணெய் விலை குறைப்பதற்காக கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. இரண்டாவது முறையாக இம்மாதம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன் பிறகும் சமையல் எண்ணெய் விலை குறைந்தபாடில்லை. இதனால் இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யவேண்டுமென மாநில அரசினை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோக செயலாளர் சுதன்சு பாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “சமையல் எண்ணை மீதான வரி குறைக்கப்பட்டதன் முழு பலனும் பொதுமக்களை சென்றடைய வேண்டும். இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சமையல் எண்ணெய் விலை குறையும். நெல் அதிகம் விளையும் பகுதிகளில் ரைஸ் பிராண்டு எண்ணையை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |