Categories
மாநில செய்திகள்

சமையல் எண்ணெய் விலை குறைவு….. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சர்வதேச சந்தையில் பாமாயில், சோயா, சன் பிலௌர் எண்ணெய் வகைகளின் விலை மிகவும் அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் விலை கடுமையான விலை உயர்வை சந்தித்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் பயனடையும் வகையில் முடிந்த அளவு விலையை குறைக்க வேண்டும் என்று சங்கங்கள் சார்பில் உறுப்பினர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. கடந்த முப்பது நாளில் சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு 8 முதல் 10 ரூபாய் வரை குறைந்துள்ளது. இனிவரும் நாட்களில் மூன்று முதல் நான்கு ரூபாய் வரை கிலோவுக்கு குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பால் நுகர்வோருக்கு ஓரளவு சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |