Categories
மாநில செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த மாதம் மேலும் 25 ரூபாய் அதிகரித்து 877 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் விலை மேலும் ரூபாய் 25 அதிகரித்துள்ளது. ரூபாய் 25 விலை அதிகரிப்பின் காரணமாக சமையல் சிலிண்டர் விலை 852 லிருந்து 877 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே பொருளாதார ரீதியாக மிகுந்த இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் பெட்ரோல் டீசல் விலை, சமையல் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

Categories

Tech |