Categories
மாநில செய்திகள்

சமையல் எரிவாயு விலையுயர்வு…. கமல்ஹாசன் கடும் விமர்சனம்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று முன்தினம் முதல் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வு எல்லையை தாண்டுகிறது. தனது சாதனையை தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்கு துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? என்றே மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |