Categories
அரசியல்

சமையல் சிலிண்டர்…. டெலிவரிமேனுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?…. தெரிஞ்சுகோங்க….!!!!

சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் உங்களிடம் அதிக பணம் கேட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் வீட்டில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் பதிவு செய்து வாங்கி வருகிறோம்.  சிலிண்டர் புக்கிங் ஆன பிறகு அடுத்த நாளே சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த சமையல் சிலிண்டர் தொடர்பான விதிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை .அது தெரியாமல் பலரும் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். டெலிவரி செய்யும் நபருக்கு நீங்கள் ஏதேனும் பணம் கொடுக்க வேண்டுமா? என்பதுதான் அந்தச் சந்தேகம்.

சிலிண்டர் டெலிவரி செய்வது அவர்களின் பணி. அதற்கு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. அதேபோல சிலிண்டருக்கான டெலிவரி கட்டணம் நாம் புக்கிங் செய்த தொகையிலேயே கழிக்கப்பட்டுவிடும். சிலிண்டர் 950 ரூபாய் என்றால் டெலிவரி மேன் நம்மிடம் ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்கிறார். உண்மையில் சிலிண்டர் டெலிவரிக்கு நீங்கள் பணம் எதுவும் கொடுக்கத் தேவை கிடையாது.  நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்தால் உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி செய்வது ஏஜென்சியின் வேலை. சிலிண்டர் டெலிவரி சமயத்தில் பணம் எதுவும் கேட்டால் நீங்கள் கொடுக்க தேவையில்லை. ஒருவேளை உண்மையிலேயே டெலிவரிக்கு பணம் கேட்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளிக்கலாம். இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

Categories

Tech |