தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்து உள்ளது.
சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை 785 லிருந்து 810 ஆக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 3வது முறையாக சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 735 ஆக இருந்தது. இதை அடுத்து பிப்ரவரி 14ஆம் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து 785 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் மூன்றாவது முறையாக சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்ந்து 755 ரூபாயிலிருந்து 810 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. பொதுமக்களின் அன்றாட அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.