Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சமையல் செய்து தருமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை குடி கிராமத்தில் டிரைவரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யா, கவியரசி, தீபிகா என்ற மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசி கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயக்கொடி பருத்திவயலுக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து சமைத்து தருமாறு கவியரசியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தாய் மற்றும் மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசி தனது வீட்டில் இருந்த விஷத்தை குறித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவியரசி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |