கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டை கிராமத்தில் ராஜாமணி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய தவான் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கோமளா வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சூடாக இருந்த ரசத்தை பாத்திரத்தில் ஊற்றி அறையில் இருந்த கட்டிலின் கீழ் வைத்துள்ளார். இந்நிலையில் கட்டிலின் மேல் இருந்த தவான் எதிர்பாராதவிதமாக பாத்திரத்தில் தவறி விழுந்ததால் குழந்தையின் உடல் முழுவதும் வெந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கோமளா தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.