Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சமையல் செய்த போது வெடித்த கேஸ்… மளமளவென பரவிய தீயால்… நேர்ந்த கொடூரம்..!!

சமையல் செய்தபோது கேஸ் வெடித்து தீ பரவி வீடு எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ராமநாதபுரம் மாவட்டம்,  பாம்பன் லைட் ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் பிரவீனா. இவர் வீட்டின் சமைப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்து சமைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது.

குடிசை வீடு என்பதால் வேகமாக பரவியது. தீயானது அருகிலுள்ள வீட்டிற்கும் பரவி எரிந்தது. இதனால் இரு வீடுகளும் பற்றி எரிந்தன. தீ விபத்தால் வீட்டிலிருந்த பணம் ரூபாய்  50,000 மற்றும் 5 பவுன் நகைகள் ஆகியன தீயில் எரிந்து கருகின. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்பன் பகுதி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |