Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சமையல் ருசியாக இருக்க சில ரகசியங்கள்… இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

சமையல் ஈசியாகவும் ருசியாகவும் இருக்க இது வரை நீங்கள் கேள்விபடாத சில ரகசியங்கள்.

பாயாசம் செய்யும் பொழுது கெட்டியாக இல்லாமல் நீர்த்துப் போய் விடுகிறதா? அப்போ கடலை மாவை நெய்யில் வறுத்து தண்ணீரில் கெட்டியாக கரைத்து பாயாசத்தில் கலந்தால் பாயாசம் கெட்டியாகவும், வித்தியாசமான வாசத்துடனும் சுவையாகவும் இருக்கும்.

கூட்டு, வறுவல் போன்ற உணவு வகைகளில் உப்போ, காரமோ அதிகமாகி விட்டால், காய்ந்த பிரட் துண்டுகள் அல்லது ரஸ்க் துண்டுகள் இருந்தால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் சேர்த்து விட்டால் சரியாகி விடும்.

மைதா, ரவை, அரிசி போன்ற பொருட்களில் பூச்சி, புழுக்கள் வருவதை தடுக்க கொஞ்சம் வசம்பை நுணுக்கி சேர்த்தால் போதும் பூச்சிகளே வராது.

பொதுவாக வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை நிறம் மாறாமல் இருக்க அவற்றை அரிந்த பின் மோர் கலந்த நீரில் போட்டு வைப்பார்கள். ஆனால் அப்படி செய்தால் வாழக்காய், வாழைத்தண்டு புளிப்பாக இருக்கும். அதற்கு பதிலாக மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாமல், புளிப்பு சுவையும் இல்லாமல் இருக்கும்.

Categories

Tech |