Categories
தேசிய செய்திகள்

சமையல் வேலைக்கு போன இடத்தில்…. 1 இல்ல 2 இல்ல 5 பேர்…. பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் திருமண நிகழ்ச்சியில் சமையல்பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். திருமணம் நடைபெறும் மண்டபத்துக்கு அவ்விரு பெண்களையும் அழைத்துச் சென்ற இந்தர் மாலி என்ற நபர், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பெண்கள் இருவரையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். தொடர்ந்து மற்றொரு இடத்துக்கு அழைத்து சென்று மற்ற இருவரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த மூவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அதைத்தொடர்ந்து அப்பெண்கள் இருவரையும் அங்கிருந்த இருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அனுப்பியுள்ளனர். இருப்பினும் அங்கிருந்து வெளியேறிய அப்பெண்கள் இருவரும் நேராக மைன்பூரி காவல்நிலையத்தில் ஐந்து பேர் மீதும் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், பாதிக்கப்பட்ட இருபெண்களின் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் கூட்டுப் பலாத்காரம் மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |