Categories
மாவட்ட செய்திகள்

“சமோசாவுக்குள் இருந்த பல்லி” சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ராமநாதபுரத்தில் சமோசாவில் பல்லி கிடந்ததை அறியாமல் சாப்பிட சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கார்மேகம். இவர் சம்பவத்தன்று ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தன் மகன் வாசுதேவனுக்கு சமோசாவை வாங்கி வந்திருக்கிறார். இதை சாப்பிட்ட சிறுவனுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சிறுவன் சாப்பிட்ட சமோசாவில் பல்லி இருந்தது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுவனை மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்தனர். இந்நிலையில் இதைப்போல் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |