சென்னையில் கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தொழில் பழகுநர் பணிக்கு ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு 214 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதனையடுத்து பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கிராஜுவேட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான மாத சம்பளம் 9,000 ரூபாய் ஆகும். அதன்பிறகு பொறியியல் துறையில் டிப்ளமோ படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான மாத சம்பளம் 8,000 ரூபாய் ஆகும். இந்தப் பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் http://boat-srp.com/என்ற இணையதள முகவரியில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.