ஐசரி கணேஷ் தயாரிக்கும் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் கொரோனா குமார் திரைப்படம் டிராப்பாக உள்ளதாக கூறப்படுகின்றது.
நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுவார். இடையில் சிம்புவிற்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு ரீ என்ட்ரியாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மாநாடு திரைப்படத்திற்கு முன்னதாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று திரைப்படங்களில் நடித்து தருவதாக ஒப்பந்தம் ஆனார் சிம்பு.
அப்போது அவருக்கு சம்பளமாக பேசப்பட்ட தொகை 10 கோடி. வெந்தது தனிந்தது காடு திரைப்படத்திற்கு அடுத்ததாக கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. இவ்விரு திரைப்படங்களையும் ஐசரி கணேஷ் தயாரிக்கின்றார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு தனது சம்பளத்தை அதிகமாக கேட்கிறாராம். இதனால் ஐசரி கணேஷ் சிம்புவின் மீது கோபத்தில் உள்ளாராம். ஆகையால் இத்திரைப்படம் டிராப்பாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.