Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சம்பளத்தை உயர்த்துங்கள்…. ஊழியர்களின் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பணி…!!

எவர்சில்வர் பட்டறை  ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள 25 ற்கும் மேற்பட்ட பித்தளை மற்றும் எவர்சில்வர் தயாரிக்கும் பட்டறை அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்குரிய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காரைக்குடி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், தரையில் படுத்து தூங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |