கமல் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். முதலில் குண சித்திர கதாபாத்திரங்களில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக முன்னேறினார். பின்னர் பல படங்களில் நடித்து வெற்றி வாய்ப்பை குவித்தார் . இவர்கள் இருவருமே உச்சத்தில் இருந்த நடிகர்கள் ஆவார். மேலும் நல்ல சம்பளம் வாங்கி வந்தனர். இந்த நிலையில் ரஜினி தனது சம்பளத்தை குறைத்துள்ளதாகவும், கமல் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘விக்ரம்’ வெற்றியை தொடர்ந்து அவர் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு 150 கோடி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி ஜெயிலர் திரைப்படத்திற்கு 370 கோடி மட்டுமே சம்பளம் பெறுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி தனது சம்பளத்தை குறைக்க காரணம் என்ன என்பது புதிராகவே இருக்கிறது.