உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தலைமைச் செயலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து அங்கு அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அதன் பிறகு மர்ம நபர்கள் பாதைகளை அடைத்துவிட்டனர். இதனால் அதிருப்தியான அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ். சந்து, அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், போராட்டத்தை நிறுத்தி பணிக்கு செல்லவில்லை என்றால் ஊதியம் இல்லை என்ற உத்தரவை அமல்படும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.