Categories
மாநில செய்திகள்

சம்பளம் கேட்ட “காவலாளி”… பெட்ரோல் ஊற்றி “உயிருடன் கொளுத்திய” உரிமையாளர்கள்…. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூரில் 2 மாத சம்பள தொகையை கேட்ட தனியார் நிறுவன காவலாளியை அதன் உரிமையாளர்கள் உயிருடன் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்நிறுவனத்தில் அவருக்கு 2 மாத சம்பளத் தொகை கொடுக்கப்படவில்லை. ஆகையினால் ரத்தினவேல் தனியார் நிறுவன உரிமையாளர்களான திலீப்குமார் மற்றும் ஜான் ஆகியோரிடம் தனது சம்பளம் குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து திலீப்குமார் மற்றும் ஜான் ரத்தின வேலை நவ இந்தியா பகுதிக்கு வரும்படி கூறிவிட்டு சம்பளத்தை வங்கி கணக்கில் ஏற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்கள். இதனை ஏற்க மறுத்த ரத்தினவேல் திலீப் குமார் மற்றும் ஜானிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த திலீப்குமார் மற்றும் ஜான் ரத்தின வேலை சரமாரியாக தாக்கி தங்களது காரில் ஏற்றிக்கொண்டு கொடிசியா பகுதியிலுள்ள கழிப்பறைக்கு அருகே சென்றுள்ளார்கள். அதன்பின்பு திலீப்குமார் மற்றும் ஜான் ரத்தினவேல் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார்கள். இவரது கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ரத்தினவேலை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கிடையே திலீப் குமார் மற்றும் ஜான் ரத்தினவேலின் கூச்சலை கேட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் தனியார் நிறுவன உரிமையாளருமான திலீப்குமார் மற்றும் ஜானை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Categories

Tech |