உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஐடி துறையில் பணியாற்றிய ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் மற்ற நிறுவனங்களை போலவே கூகுள் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சில வருடங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய முக்கியமான இலக்கை கையில் வைத்திருக்கும் இந்த சூழலில் அதிர்ச்சியளிக்கும் செய்தி கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளது.
அதாவது கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊழியர்கள் மத்தியில் Googlegeist
என்ற பெயரில் முக்கியமான ஆய்வு நடத்தும். அதே போல இந்த வருடமும் கூகுளில் பணிபுரிவதை ஊழியர்கள் எவ்வளவு பெருமையாக உணர்கிறார்கள் என்பதை மதிப்பிடும் விதமாக கூகுள் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது . கூகுள் நிறுவனம் ஊழியர்களிடம் கேட்ட கேள்விக்கு, ஊதியம், பதவி உயர்வு ஆகியவை மகிழ்ச்சி அளிப்பதில்லை என்று பதிலளித்துள்ளனர் என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.