தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி விளாங்காட்டு காலனியில் தொழிலாளியான இசக்கியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இசக்கியப்பன் அடிக்கடி பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மது குடித்து செலவழித்துள்ளார். சம்பவத்தன்று இசக்கியப்பன் மது குடிப்பதற்காக பணம் கேட்டு சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது பணம் கொடுப்பதற்கு சரஸ்வதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இறந்த இசக்கியப்பன் மதுவில் பூச்சிகொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இசக்கியப்பனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.