Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தை கடனாக கொடுத்த வாலிபர்…. கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை பகுதியில் விஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக விஜூ வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜூ தனது சம்பள பணத்தை ஒருவருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதற்கிடையே புதிதாக வீடு வாங்குவதற்காக விஜூவிடம் அவரது பெற்றோர் பணம் கேட்டுள்ளனர். அப்போது தனது சம்பள பணத்தை ஒருவருக்கு கடனாக கொடுத்ததாக விஜூ கூறியுள்ளார். இதனால் விஜூவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து கடன் கொடுத்த நபரிடம் விஜூ பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜூ நாகர்கோவில் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |