Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தை வாங்கிய தொழிலாளி…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஓடும் பேருந்தில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் காமராஜ் நகரில் சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து 500 ரூபாய் சம்பள பணத்தை வாங்கிக்கொண்டு சொந்த வேலை காரணமாக சிவசந்திரன் நண்பருடன் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர் சிவசந்திரனின் சட்டை பையில் இருந்த 500 ரூபாய் பணத்தை திருடிவிட்டு தப்பியோட முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசந்திரன் நண்பரின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தென்னூர் ஆழ்வார்பேட்டை சின்னசாமி நகரை சேர்ந்த சதாம் உசேன் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சதாம் உசேனை கைது செய்தனர்.

Categories

Tech |