சத்தீஸ்கரில் சம்பள பாக்கி கேட்டு வந்த டிரைவரை சக பெண் ஊழியர்கள் சேர்ந்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் டிராவல்ஸ் என்னும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் டிரைவராக தினேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்கவில்லை. இந்த சூழலில் ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்திருக்கின்ற அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற தினேஷ் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் தனக்கு சொந்தமான சம்பள பாக்கியை வழங்குமாறு கேட்டு இருக்கின்றார். ஆனால் பெண் ஊழியர் அவரை தகாத வார்த்தைகள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் நிறுவனத்தின் மேலாளர் செல்போன் என்னை தரும்படி பெண் ஊழியரிடம் கேட்டிருக்கின்றார்.
In @aairprairport , young women beat up the young man badly with a belt, slippers
Controversy escalated between boys and girls working together in Rahul Travels over asking for manager's number
#Raipur #airport #Chhattisgarh #GirlsFight #cgdailynews pic.twitter.com/Gx6AFyrUKk— Shiv Kumar Maurya (@ShivKum60592848) September 19, 2022
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர்கள் ராகுலை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் விமான நிலையத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது ஐந்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து தினேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். தினேஷின் சட்டையை கிழித்து மாணபங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் அவரை ‘பெல்ட்’டால் அடித்து இருக்கின்றனர். பெண் ஊழியர்கள் தாக்குவதை அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல் தங்கள் செல்போனில் வீடியோவாக படம் எடுத்து இருக்கின்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன் மீது தாக்குதல் நடத்திய பெண் ஊழியர்கள் மீது தினேஷ் போலீசில் புகார் அளித்திருக்கின்றார். இந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.