நடிகை நிவேதா தாமஸ் சம்பள விஷயத்தில் எப்போதும் கறாராக இருந்ததில்லை என தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நிவேதா தாமஸ். மேலும் இவர் மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நிவேதா தாமஸ், ‘இதுவரை நான் நடித்த அனைத்து படங்களிலும் என் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவாக அமைந்தது. நம்பிக்கையோடு என் கதாபாத்திரங்களில் நடித்தேன் .
எப்போதுமே நான் சம்பள விஷயத்தில் கறாராகவும், தயாரிப்பாளர்களுக்கு பாரமாகவும் இருந்ததில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த சினிமா துறையிலும் மோசமான அனுபவங்களை நான் எதிர்கொள்ளவில்லை. இதுவரை எந்த ஒரு இயக்குனரும் என்னை ஓடிடி படங்களில் நடிக்க அணுகவில்லை. யாராவது வாய்ப்பு கொடுத்தால், கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தால் ஓடிடி படங்களில் நிச்சயம் நடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.