Categories
சினிமா

சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்கள்…. நடிகை எரிக்கா பெர்ணான்டஸ் ஆவேசம்…..!!!!!

தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ஐந்து ஐந்து ஐந்து  படத்தில் பரத் ஜோடியாக நடித்தவர் நடிகை எரிக்கா பெர்ணான்டஸ். அதன் பிறகு விரட்டு விழித்திரு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு முன்னணி சின்னத்திரை நடிகை ஆகி விட்டார். வெப் தொடர்களில் சரியான கதைகள் இல்லாமல் வெறும் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத காட்சிகளை கமர்ஷியல், வியாபார நோக்கத்துடன் சிரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை.

அதனால் தான் தேடி வந்த வாய்ப்புகளை நிராகரிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். கதைக்கு முக்கியமாக இருந்தால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் வலிந்து திணித்து பணம் சம்பாதிக்க நினைத்தால் அதற்கு நான் உடன்பட மாட்டேன். அதனால் தான் தேடி வந்த வாய்ப்புகளை நிராகரிக்கிறேன். சின்ன தொடர்களின் நடிப்பது எனக்கு நிறைவாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |