பிரேசிலில் புகழ்பெற்ற சம்பா நடனத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற சம்பா நடனம் திருவிழா களைகட்டியது. இந்த திருவிழாவில் முக்கிய அம்சமான நடன பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது ரியோ டி ஜெனிரோவில் உள்ள சம்போட்ரோமோ மைதானத்தில் வைத்து நேற்றிரவு கோலாகலமாக நடந்தது.
இதனை அடுத்து நடன பயிற்சி பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் நடனம் மற்றும் இசை கலைஞர்களின் குழுவினர் வண்ணமயமான உடைகள் அணிந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தியவாறு ஊர்வலமாக சென்று மைதானத்தை அழகு படுத்தினர். இந்த போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் கடந்த 20ம் தேதி தொடங்கிய இந்த திருவிழா இம்மாத இறுதி வரை நடைபெற உள்ளது.