வேளாண்மை உழவர் நலத் துறை அறிக்கையில் இருப்பதாவது “தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், கரூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவ நெற் பயிரை காப்பீடு செய்வதற்குரிய கடைசிநாள் 15/11/2022 ஆகும்.
கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2ஆம் போக நெல்நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் 15/12/2022க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கிடையில் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருப்பின், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (அ) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம்.
அத்துடன் https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் “விவசாயிகள் கார்னர்” எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்துகொள்ளலாம். காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள், முன் மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற அடங்கல் (அ) இ-அடங்கல் (அ) விதைப்பு அறிக்கை, வங்கிக்கணக்குக் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார்அட்டை ஆகியவை ஆகும்