Categories
அரசியல்

சம்மருக்கு டூர் போக ரெடியா இருக்கீங்களா?…. உங்களுக்கு ஒரு கடுப்பான செய்தி….!!!

தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் சுற்றுலா செல்வதற்கு பலரும் தயாராகி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா செல்வதற்கு பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு புது தடை ஒன்று தடாலென தலையில் விழுந்துள்ளது. அது என்னவென்றால் இன்று முதல் (ஏப்ரல் 1) டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி டோல்கேட் கட்டணத்தை பத்து ரூபாய் முதல் 65 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி கார்கள், நான்கு சக்கர வாகனங்கள், இலகு ரக வர்த்தக வாகனங்கள், கனரக வாகனங்கள் அனைத்திற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய நிதியாண்டில் இன்று முதல் புதிய டோல் கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன. கார் மற்றும் சி போன்ற வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் ஐந்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரையும், பேருந்துகள் மற்றும் லாரி போன்ற வர்த்தக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு 45 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் டோல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்களுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக இது அமைந்துள்ளது.

Categories

Tech |