நடிகை கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் நடிகர் நிதினுடன் இணைந்து நடித்த ரங் தே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
What's better than some yellow on a summer day? ☀️#RangDe #RangDeBTS pic.twitter.com/Y0iTtOzje8
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 8, 2021
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘சம்மரில் இதைவிட வேறு எது பெட்டராக இருக்கும்?’ என பதிவிட்டு மஞ்சள் நிற சேலை அணிந்து எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.