பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் சம்யுக்தாவிற்கு கமல் குறும்படம் போட்டுக்காட்டியுள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மேலும் நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலாஜி இருவரும் சேஃப் என கமல் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டியுள்ளார். அதாவது ஆரியின் வளர்ப்பு சரியில்லை என கால் சென்டர் டாஸ்கில் சம்யுக்த்தா கூறியதன் காரணம் தனது தாய்மைப் பற்றி ஆரி பேசியதால் தான் என தெரிவித்தார். இதைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த குறும்படம் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் யார் மீது தவறு, யார் வெளியேற போகிறார்கள் என்பதை காத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil இல் இன்று.. #Day56 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/bzjq1gZT9K
— Vijay Television (@vijaytelevision) November 29, 2020