இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் சயனைடை விட 6 ஆயிரம் மடங்கு நச்சு உள்ள உலகின் கொடிய தாவரத்தை வளர்த்தது கண்டறியப்பட்டுள்ளது. ரிசினஸ் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த தாவரம் ஆமணக்கு வகையை சேர்ந்தது. உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாக கின்னஸ் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது.
இந்த தாவரம் இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் கார்டன் பூங்காவில் இருப்பதை பார்த்த பெண் ஒருவர் செல்போனில் படம் பிடித்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். அவர் அந்த தாவரத்தின் நச்சுத்தன்மையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து இந்த தாவரங்களை கையுறைகளால் கையாள வேண்டும் இந்த தாவரத்தின் விதைகளின் நுகர்வு மிகவும் ஆபத்தானது என அவர் கூறியுள்ளார்.